ETV Bharat / sitara

லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்ட பீட்டர் பாலின் முதல் மனைவி! - லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Breaking News
author img

By

Published : Jul 24, 2020, 8:52 PM IST

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வனிதா- பீட்டர் பாலின் திருமணம் தான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குரல் கொடுத்துப் பேட்டியளித்தார்.

அப்போது லட்சுமி ராமகிருஷ்ணனை, வனிதா தகாத வார்த்தைகளால் பேசினார். வயதிற்குக் கூட மரியாதை கொடுக்காமல், நடிகை வனிதா பேசியதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த காணொலியை நடிகை கஸ்தூரி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர், தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில் எலிசபெத் ஹெலன் கூறியதாவது, "லட்சுமி ராமகிருஷ்ணன் எங்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள். இதை நாங்கள் சொல்லித் தான் அவர் பேசினார். ஆனால், வனிதா அவரது வயதுக்குக் கூட மரியாதை கொடுக்காமல் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

எலிசபெத்
எலிசபெத்

'வாடி... போடி' என்று தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் பேசியது, என் மனதிற்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் இரண்டு நாட்களாக நான் தூங்கவில்லை.

என்னால் லட்சுமி ராமகிருஷ்ணனுக்குக் கஷ்டம் ஏற்பட்டது என்று நினைத்து மிகவும் வருந்தினேன். நியாயத்திற்காகப் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணனைப் புரிந்து கொள்ளாமல், வனிதா தகாத வார்த்தைகளால் திட்டியதற்கு, நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

வனிதா பேசியது தவறுதான். அவர் மன்னிப்புக் கேட்பாரா என்று எனக்குத் தெரியாது? ஆனால், நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.