நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'அர்ஜுன் ரெட்டி'. சந்தீப் இயக்கிய இப்படத்தில் நாயகியாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார்.
இப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி ரசிகர்களாலும் விரும்பப்பட்டது. இப்படத்தில் ஷாலினி பாண்டே நடிப்பதற்கு முன்பாக பார்வதி நாயர் நடிப்பதாக இருந்தது. ஆனால் தனக்கும், அந்த கதாபாத்திரத்திற்கும் சரிவராது என கூறி பட வாய்ப்பை அவர் நிரகாரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பார்வதி நாயரிடம் சமீபத்தில் ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு தனது சமூக வலைதளத்தில் பதிலளித்த அவர், "அர்ஜுன் ரெட்டி படத்தில் நான் நடிக்க மறுத்த விஷயம் உண்மைதான்.
அது ஒரு நல்ல படம். அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன். அதைவிட இன்னும் நிறையப் படங்களின் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சுஷாந்த் சிங்கை நினைவுகூர்ந்த சஞ்சனா சங்கி