அமலா பால் நடிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் 'ஆடை' திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அமலா பால் ஆடை இல்லாமல் நடித்திருக்கிறார் என்று இப்படம் வெளியாக பல தடைகள் உருவானது. மேலும், ஆடை படம் ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் என்று கூறிய நிலையில் அன்று காலை வெளியாகமால் மாலை நேர ஷோக்களில்தான் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது.
அதன் பிறகு, ஆடை படம் பொதுமக்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் 'ஆடை' படம் பார்த்த பிறகு அவரது ட்விட்டர் பக்கத்தில் , 'பிராங்க் ஷோவை மையமாக வைத்து ஆடை படம் நகர்கிறது. இதே மையக் கருவை பெண் கதாபாத்திரத்திற்கு பதிலாக ஆண் கதாபாத்திரம் வைத்து குடைக்குள் மழை எடுக்கப்பட்டது. 15 வருடம் கழித்து மீண்டும் பிராங்க் ஷோவை மையமாக வைத்து ஒரு படம் உருவாக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. ஈவ் டீசிங்கைவிட பிராங்க் கொடுமையானது. பிராங்கை ஒழிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது' என பதிவிட்டுள்ளார்.