ETV Bharat / sitara

'பரவை முனியம்மா' பற்றிய வதந்திகளுக்கு அபி சரவணன் முற்றுப்புள்ளி! - பரவை முனியம்மா சிகிச்சை

மதுரை: நாட்டுப்புற பாடகியும், குணச்சித்திர நடிகையுமான பரவை முனியம்மாவை நடிகர் அபி சரவணன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

paravai-muniyamma
author img

By

Published : Nov 1, 2019, 5:57 PM IST

விக்ரம் நடிப்பில் வெளியான தூள் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா. பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியதோடு, காதல் சடுகுடு, ஏய், தோரணை உள்ளிட்ட 25 திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

மதுரை பரவை பகுதியில் தனது மகன் வீட்டில் வசித்து வரும் இவர், வயது முதிர்வு காரணமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இருதயக் கோளாறு மற்றும் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பரவை முனியம்மாவை 'பட்டதாரி' திரைப்பட நடிகர் அபி சரவணன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். கூடவே, அவருக்குத் தேவையான மருத்துவ செலவையும் ஏற்பதாகக் கூறியிருந்தார்.

இதனிடையே, பரவை முனியம்மாவுக்கு இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக அபி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்து, அபி சரவணன் நேரில் சென்று பரவை முனியம்மாவை மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்துள்ளார். தொடர்ந்து மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து மருத்துவ செலவை ஏற்பதாகக் கூறினார்.

மேலும், பரவை முனியம்மா சிகிச்சை பெற்று குணமாவது வரை அனைத்து செலவையும் இலவசமாக பார்த்து கொள்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மாவின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்தி பரப்பியதை அடுத்து, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அபி சரவணன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பரவை முனியம்மா நல்ல ஆரோக்கியத்துடன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரவை முனியம்மா பற்றிய வதந்திகளுக்கு அபி சரவணன் முற்றுப்புள்ளி

முன்னதாக, மருத்துவமனையில் உள்ள நடிகர் அபி சரவணனை தொடர்பு கொண்ட தமிழ் திரையுலக நடிகர்கள் சிலர், பரவை முனியம்மாவுக்கு உதவுவதாகத் தெரிவித்து நலம் விசாரித்ததாக நடிகர் அபி சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க...

சிகிச்சைக்கு கதியற்று போன பரவை முனியம்மா - கைகொடுத்த நடிகர்!

Intro:*நாட்டு புற பாடகி பரவை முனியம்மாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு மூச்சு திணறல் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நடிகர் அபி சரவணன்*Body:*நாட்டு புற பாடகி பரவை முனியம்மாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு மூச்சு திணறல் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நடிகர் அபி சரவணன்*

தமிழ் திரையுலகில் விக்ரம் நடித்த தூள் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பாடகி பரவை முனியம்மா தமிழ் திரையுலகில் பல பாடல்களை பாடி முன்னனி தமிழ் நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் பரவை முனியம்மா

மதுரை பரவை பகுதியில் தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார்

தற்போது வயது முதிர்வு காரணமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார்

முன்னால் முதல்வர் ஜெயலலிதா பரவை முனியம்மாவுக்கு ரூ.5 லட்சம் பணத்தை வங்கிகணக்கில் வைப்புத் தொகையாக செலுத்தி மதம் வட்டி பணமாக ரூ 6000 கிடைக்கும் படி உதவி செய்தார் அந்த தொகை தற்போது வரை கிடைத்து வருகிறது

இந்த நிலையில் பரவை முனியம்மாவுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டது

இதனை அறிந்த நடிகர் அபி சரவணன் நேரில் சென்று பரவை முனியம்மாவுக்கு சிகிச்சையளிக்க முடிவெடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மருத்துவ செலவை ஏற்பதாக கூறினார்

மருத்துவமனை நிர்வாகம் பரவை முனியம்மாவின் சிகிச்சை பெற்று குணமாவது வரை அனைத்து செலவையும் இலவசமாக பார்த்து கொள்வதாக தெரிவித்துள்ளது

மேலும் மருத்துவமனையில் உள்ள நடிகர் அபி சரவணனை தொடர்பு கொண்ட தமிழ் திரையுலக நடிகர்கள் பரவை முனியம்மாவுக்கு உதவுவதாக போனில் தெரிவித்து நலம் விசாரித்ததாக நடிகர் அபி சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

பேட்டி: 1. அபி சரவணன் (நடிகர்)

பேட்டி: 2 . வீரமுத்து (உறவினர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.