ETV Bharat / sitara

ஆஸ்கர் நாயகன் மீது பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு - மறுப்பு தெரிவித்த 'ஐஸ்மேன்' திமோதி

author img

By

Published : Mar 4, 2020, 12:23 PM IST

தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டை ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் திமோதி ஹட்டன் மறுத்துள்ளார்.

Timothy Hutton
Timothy Hutton

ஹாலிவுட் நடிகர் திமோதி ஹட்டன், 1980ஆம் ஆண்டு வெளியான 'ஆர்டினரி பீப்பிள் (Ordinary People)' என்ற படத்துக்காக சிறந்த துணை நடிக்கருக்கான ஆஸ்கர் விருது வென்றார். இவர் மீது 37 வருடங்களுக்கு முன்பு பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை செரா டேல் ஜான்ஸ்டன் என்ற பெண் கூறிவருகிறார்.

திமோதி மீது முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த இரண்டரை வருடங்களாக என் மீது வேண்டுமென்றே ஜான்ஸ்டன் தவறான குற்றச்சாட்டை கூறிவருகிறார். அவர் என்னை மிரட்டி பல கோடி ரூபாய் வசூலிக்க பலமுறை முயன்றுள்ளார். ஆனால் அவரால் முடியாமல் போகவே தற்போது இந்த பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.

நான் அவரது மிரட்டலுக்கு அடிபணியாததால் 37 வருடங்களுக்கு முன்பு கனடாவில் அவரை பாலியல் வன்புணர்வை செய்தாக பத்திரிகையாளரிடம் கூறுவேன் என என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என எனக்கு தெரியவில்லை என்றார்.

இது பற்றி அவரது நண்பர் ஒருவர் கூறுகையில், திமோதி குறித்து தவறான குற்றச்சாட்டை அப்பெண் பரப்பியபோதே அவர் குறித்து எஃப்பிஐயிடம் புகார் அளித்தேன். இதையடுத்து ஜான்ஸ்டன் எஃப்பிஐயிடம் இது போன்று இனி செய்யமாட்டேன் என உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால் தற்போது மீண்டும் பரப்பி வருகிறார் என்றார்.

திமோதி 'ஐஸ்மேன்' படத்தின் படப்பிடிப்பிற்காக, கடந்த 1983 ஆம் ஆண்டு கனடா வந்தார். அப்போது நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எனது வகுப்பு தோழர்கள் இருவர் திமோதியை எனக்கு அறிமுகப்படுத்துவதாகக் கூறி, அவர் தங்கிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்பு என்னை அவர் பாலியல் வன்புணர்வு செய்தாக ஜான்ஸ்டன் ஏற்கனவே பத்திரிகையாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.