விக்ரம் வேதா திரைப்படத்தைத் தொடர்ந்து மாதவன் தற்போது 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மாதவன் 'மாறா' என்ற படத்திலும் நடித்துவருகிறார்.
மலையாளத்தில் துல்கர் சல்மான்-பார்வதி நடிப்பில் வெளியான 'சார்லி' திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே கல்கி என்ற குறும்படத்தின் இயக்குநராவார்.
'மாறா' படத்தில் மாதவனுடன் இரண்டாவது முறையாக இப்படத்திலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்துள்ளார்.
அலெக்சாண்டர் பாபு, மினன் ஜான் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரமோத் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தீபக் பகவான் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நெடுஞ்சாலை, அதே கண்கள், ஜீரோ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவதா மாதவனின் 'மாறா' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
'தர்பார்' வெளியீட்டுக்கு 1,370 இணையதளங்களுக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம்