ETV Bharat / sitara

“ஓ மணப்பெண்ணே” - ரசிகர்களுக்கு நன்றி - "Oh manappenne" - have thanked to fans who contributed to the success of the film

“ஓ மணப்பெண்ணே” - திரைப்பட தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றிக்கு காரணமான அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

நடிகை பிரியா பவானி
நடிகர் ஹரீஷ் கல்யாண்,
author img

By

Published : Nov 3, 2021, 10:33 AM IST

அக். 22 அன்று ஓடிடியில் வெளியாகியுள்ள கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள “ஓ மணப்பெண்ணே” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படத்திற்கு, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகேர் இசையும் அமைத்துள்ளனர்.

உலகம் முழுதும் இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் வெற்றிபெறச் செய்த ரசிகர்களுக்கு, தயாரிப்பாளர்கள் தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ் ரசிகர்களின் மீது பெரும் நம்பிக்கையில், தங்கள் திரைப்பயணத்தைத் தொடர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ரசிகர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் நன்றி
“ஓ மணப்பெண்ணே” -

இத்திரைப்படம், தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கிய ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். முன்னதாக, தெலுங்கில் ரவிதேஜா மற்றும் அர்ஜூன் நடிப்பில், தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைப்பில் 'கில்லாடி' என்ற படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மறைக்கப்பட்ட... மறுக்கப்பட்ட பலகதைகள் இனி வரும் - பா.இரஞ்சித் நெகிழ்ச்சியான ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.