ETV Bharat / sitara

#RT66 படத்தில் இணைந்த 'ஸ்ருதி ஹாசன்' - விஜய் சேதுபதியின் லாபம்

தெலுங்கில் ரவி தேஜா நடிக்கவிருக்கும் 'ஆர்டி66' என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்.

Shruti Hassan
author img

By

Published : Oct 30, 2019, 1:51 PM IST

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தமிழில் ‘7ஆம் அறிவு’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

தனுஷுக்கு ஜோடியாக 3 திரைப்படங்களிலும், தொடர்ந்து பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

Shruti Hassan
நடிகை ஸ்ருதி ஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், பாடகராகவும் அசத்தி வருகிறார்.

தற்போது, தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்க இருக்கும் 'ஆர்டி66' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனமான லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Shruti Hassan
ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன்

இந்தப்படத்தை தெலுங்கில் டான் சீனு, பாடிகார்ட், வின்னர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கோபிசந்த் மலிநேனி இயக்குகிறார். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழில் நடிகர் விஜய்சேதுபதி - இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் கூட்டணியில் உருவாகிவரும் லாபம், இந்தியில் பவர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க...

'கொம்புவச்ச சிங்கம்டா' - படக்குழுவின் புதிய அறிவிப்பு

Intro:Body:

shruthi hassan

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.