ETV Bharat / sitara

நடிகை ஆண்ட்ரியா 'தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி' -விஜய் ஆண்டனி - Andrea

சென்னை: நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி என விஜய் ஆண்டனி புகழாரம் சூட்டியுள்ளார்.

மாளிகை திரைப்படம்
author img

By

Published : Apr 10, 2019, 10:03 AM IST

'மாளிகை' திரைப்படம் சாந்தி டெலிஃபிலிம் சார்பில் பவானி என்டர்டெயின்மென்ட் தயாரித்து இயக்குநர் தில் சத்யா இயக்கியுள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார், ஜெ.கார்த்திக், அலி, அசுதோஷ் ரானா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், இயக்குநர் தில் சத்தியா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி டீசரை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் தில் சத்யா பேசியதாவது:

இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே., இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார்.

கே.எஸ்.ரவிக்குமாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் த்ரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா பேசுகையில், 'நான் நிறைய பெரிய இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கியக் காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால்தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்' என்றார்.

இறுதியாக இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி, 'நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா இன்னும் நிறைய படங்களைத் தமிழில் தயாரிக்க வேண்டும். தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார். இந்தப் படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்' என பேசினார்.

நடிகை ஆண்ட்ரியா"தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி" -  விஜய் ஆண்டனி.

ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் "மாளிகை" முதன்முறையாக இரட்டைவேடங்களில் ஆண்ட்ரியா நடிக்கும் இந்தப் படத்தை
சாந்தி டெலிபிலிம் சார்பில் பவானி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 
இயக்குநர் தில் சத்யா இயக்குகிறார்.  கே.எஸ். ரவிக்குமார், ஜெ.கார்த்திக், அலி, அசுதோஷ் ரானா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது சென்னையில்  இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியா  இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி  இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்குனர் தில் சத்தியா உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்து  கொண்டனர். 

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி டீஸரை வெளியிட்டார். இதனை தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது,

"இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.

நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, 

"இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்,

"நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்றார்.

வீடியோ மோஜோவில் அனுப்பி உள்ளேன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.