பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை அம்பலப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது #Metoo இயக்கம். #Metoo என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
இதில் திரையுலக பிரபலங்கள் பலர் மீதும் புகார் எழுந்தது. தனுஷ்ஸ்ரீ தத்தா, ஸ்ரீ ரெட்டி, சின்மயி என பலரும் இதன்மூலம் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பதிவு செய்திருந்தனர்.
’பியார் கா புஞ்சமா’ இயக்குநர் லவ் ரஞ்சன் மீது ஒரு பெண்மணி மீடூ மூலம் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீபிகா படுகோன், லவ் ரஞ்சன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தீபிகா ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
#NotMyDeepika என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து தீபிகாவை விமர்சித்துவருகின்றனர். பாலியல் புகாரில் சிக்கியவரை நீங்கள் புரோமோட் செய்வது தெரியவில்லையா தீபிகா என கேள்வி எழுப்புகின்றனர்.