சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 52ஆவது பதிப்பில் திரையிடப்படும் இந்திய பனோரமா பிரிவுக்கான திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடிகர் ராஜேந்திர சிங் பாபு தலைமையில் 12 பேர் கொண்ட குழு 226 படங்களிலிருந்து 25 திரைப்படங்களை தேர்வு செய்துள்ளது. இதில் அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம் தேர்வாகியுள்ளது.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இன்னும் திரைக்கு வராத இந்தப்படம் உலகின் பல்வேறு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வென்று வருகிறது. இந்நிலையில், கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் சிறந்த அயல்நாட்டு திரைப்படம் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதே போல் எஸ். நல்லமுத்து தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு 203 குறுபடங்கள், ஆவணப்படங்களிலிருந்தசு 20 படங்களை தேர்வு செய்துள்ளனர்.
இதில் ஜெயச்சந்திர ஹாஸ்மி இயக்கிய 'ஸ்வீட் பிரியாணி' இடம் பெற்றுள்ளது. டெவிவரி பாய் குறித்த கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கின்னஸ் சாதனையாளர் படம்!