தேசிய விருது வென்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான படம் 'மூத்தோன்'. இதில் நிவின் பாலியுடன் சசங் அரோரா, சோபிதா துலிபலா, மெலிசா ராஜூ தாமஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் 2019ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி வெளியானது. லட்சத்தீவிலிருந்து தனது அண்ணனைத் தேடி மும்பை வரும் தம்பியின் கதையே மூத்தோன்.
படம் வெளியாகும் முன்பே 'டொரன்டோ' சர்வதேச திரைப்பட விழாவில் 'மூத்தோன்' படம் திரையிடப்பட்டது. இப்படம் மலையாளம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியானது. இந்தியில் அனுராக் கஷ்யப், இதற்கு வசனம் எழுதியுள்ளார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுநாள் வரை காதல் மன்னன், சாக்லேட் பாயாக வலம் வந்த நிவின் பாலி, இப்படத்தில் மொத்தமாக தனது கெட்டப்பை மாற்றி, நடிப்பில் மிரட்டி இருந்தார்.
தற்போது இந்தப் படம் நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம் என மூன்று விருதுகளை வென்றுள்ளது.
நிவின் பாலியின் 'மூத்தோன்' திரைப்படத்திற்கு மேலும் 3 விருதுகள்! - முத்தும் திரைப்பட விருதுகள்
நிவின் பாலி நடிப்பில் வெளியான 'மூத்தோன்' திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில், மேலும் மூன்று விருதுகளை வாங்கியுள்ளது.