ETV Bharat / sitara

'பிக் பாக்கெட்' வேடமணிந்து காவலர்களிடத்தில் சிக்கி மீண்ட நடிகர் நிஷாந்த் ரூஸோ! - பன்றிக்கு நன்றி சொல்லி நிஷாந்த் ரூஸோ

'பன்றிக்கு நன்றி சொல்லி' திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் நிஷாந்த் ரூஷோ, தான் பிக்பாக்கெட் அடிக்கும் நபர் என காவலர்கள் தன்னை கைது செய்து அழைத்துச் செல்ல முயன்றது குறித்த சுவாரஸ்ய நிகழ்வைப் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.

'பிக் பாக்கெட்' வேடமணிந்து காவலர்களிடத்தில் சிக்கி மீண்ட நிஷாந்த் ரூஸோ!

author img

By

Published : Feb 8, 2022, 6:43 PM IST

சமீபத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட 'பன்றிக்கு நன்றி சொல்லி' திரைப்படமானது, அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாலா அரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சினிமா இயக்குநராகப் போராடும் கதாபாத்திரத்தில் நிஷாந்த் ரூஸோ நடித்துள்ளார்.

கூத்துப்பட்டறையில் நடிப்புப்பயிற்சி எடுத்துக்கொண்ட நிஷாந்த் ரூஸோ, 2018ஆம் ஆண்டு 'ஆண்டனி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு, அவருக்கு கிடைத்தது.

அப்போது படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே, 'பன்றிக்கு நன்றி சொல்லி' படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

பிக்பாக்கெட் என சந்தேகம்

இதுகுறித்து அவர் பேசுகையில், 'இந்தப் படத்தின் பல காட்சிகளை யாரும் அறியாதவண்ணம் படமாக்கினோம். கோவையில் நள்ளிரவில் பிக்பாக்கெட் திருட்டு ஒன்றை படமாக்கினோம்.

அப்போது இயக்குநர் 'கட்' சொன்னது கூட கேட்காமல், நானும், உடன் நடித்தவரும் சற்று தூரம் தள்ளி வந்துவிட்டோம்.

வழியில் எங்களை நிறுத்திய காவலர்கள் எனது கிழிந்த உடை, உடன் நடித்தவரின் முகத்தைப் பார்த்து சந்தேகப்பட்டு, ஜீப்பில் ஏற்றும் அளவுக்குத் தயாராகி விட்டார்கள். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு அனுமதி கடிதத்தை காட்டிய பின்னரே அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அதேபோல சைதாப்பேட்டையில் இரவு நேரத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் சாலை வழியாக ஓடும் காட்சிகளை படமாக்கினோம். படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், நாங்கள் ஓடுவதைப் பார்த்து சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களும் எங்களை விரட்ட ஆரம்பித்தனர்.

வித்தியாச டைட்டில் சிறப்பு

இந்தப்படத்தின் டைட்டில் ஒரு மாதிரி இருக்கிறதே என்று கூட ஆரம்பத்தில் பலர் கேட்டார்கள். இந்தப்படத்தின் டைட்டில்தான், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா சாரின் கவனத்தை ஈர்த்து, படத்தைப் பார்க்க வைத்தது.

படத்தைப் பார்த்த மறுநாளே அவரே, படத்தை வெளியிடுவதாகவும் கூற வைத்தது.

தற்போது நானும், விவேக் பிரசன்னாவும் நடித்துள்ள சர்வைவல் ஆக்ஷ்ன் திரில்லர் படம் ஒன்று ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அடுத்ததாக ஸ்போர்ட்ஸ் ஜானரில் 'யார்க்கர்' எனும் படத்தில் நடிக்கிறேன்.

'பன்றிக்கு நன்றி சொல்லி' படத்தைப் பார்த்துவிட்டு சில தயாரிப்பாளர்கள் என்னை பாராட்டியதுடன், விரைவில் இணைந்து பணியாற்றலாம் என நம்பிக்கை கொடுத்துள்ளனர்” எனப் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: நீண்ட நாள்கள் கழித்து பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.