நடிகர் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகிவரும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
சில வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இப்படப்பிடிப்பு பல காரணங்களால் நிறைவடைய தாமதம் ஆனது. எனினும், சூர்யாவுடன் செல்வராகவனும் முதன்முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
![என்ஜிகே](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2945590_ngk-tweet.jpg)
இப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதுதவிர நடிகர் சூர்யா இயக்குநர் கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.