ETV Bharat / sitara

ரிலீசுக்கு முன் சாதனை வேட்டையைத் தொடங்கிய 'என்ஜிகே'

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மே 31ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'என்ஜிகே' படம் தற்போதே சாதனை வேட்டையைத் தொடங்கியுள்ளது.

author img

By

Published : May 9, 2019, 12:15 PM IST

ரிலீசுக்கு முன் சாதனை வேட்டையைத் தொடங்கிய 'என்ஜிகே'

நடிகர் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் முதல் முறையாக இணைந்திருக்கும் இந்தப் படம் அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ள படத்துக்கு இசை - யுவன்ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு - சிவகுமார் விஜயன். ஏற்கனவே படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், படத்தின் ஃபிரீ புக்கிங் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இதையடுத்து புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகள் காலியாகிவிட்டன.

வழக்கமாக ஒரு படத்தின் ரிலீசுக்கு ஒரு வாரம் முன்னரே புக்கிங் தொடங்கப்படும் நிலையில், என்ஜிகே படத்துக்கு 20 நாட்கள் முன்னதாகவே தொடங்கப்பட்டது. தற்போது அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு, ஹவுஸ் ஃபுல்லாக மாறி சாதனை புரிந்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.