மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக திகழும் டொவினோ தாமஸ், ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்துவருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'ஃபாரன்சிக்' (forensic) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனையடுத்து டொவினோ தாமஸ் இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கும் 'மின்னல் முரளி' என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில், டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
-
1 million Thanks for loving our Trailer!! #MinnalMurali⚡️https://t.co/DM7KeqMF3f#MinnalOnNetflix @SophiaPaul66 @basiljoseph25 @VladRimburg @kevinpaul90 @cedinp @shaanrahman @sushindt @AjuVarghesee @NetflixIndia @Wblockbusters1 pic.twitter.com/0njFWUKB6d
— Tovino Thomas (@ttovino) October 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1 million Thanks for loving our Trailer!! #MinnalMurali⚡️https://t.co/DM7KeqMF3f#MinnalOnNetflix @SophiaPaul66 @basiljoseph25 @VladRimburg @kevinpaul90 @cedinp @shaanrahman @sushindt @AjuVarghesee @NetflixIndia @Wblockbusters1 pic.twitter.com/0njFWUKB6d
— Tovino Thomas (@ttovino) October 28, 20211 million Thanks for loving our Trailer!! #MinnalMurali⚡️https://t.co/DM7KeqMF3f#MinnalOnNetflix @SophiaPaul66 @basiljoseph25 @VladRimburg @kevinpaul90 @cedinp @shaanrahman @sushindt @AjuVarghesee @NetflixIndia @Wblockbusters1 pic.twitter.com/0njFWUKB6d
— Tovino Thomas (@ttovino) October 28, 2021
படத்தில் டொவினோ தாமஸுடன் குரு சோமாசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரி ஸ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன் உள்ளிட்ட பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து இப்படத்தில் நடித்துவருகின்றனர்.
சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் இந்த படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மின்னல் முரளி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (அக்.28) வெளியானது. 90களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் சொல்கிறது.
மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.
'மின்னல் முரளி' நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் பாசில் ஜோசப் கூறியதாவது, காமிக் புத்தகத்தில் தொடங்கி திரைப்படங்கள் வரை சூப்பர் ஹீரோ கதைகளுக்கு நான் எப்போதும் ரசிகன்.
நான் ரசிகர்கள் ரசிக்கும் படியான ஒரு மிகச்சிறந்த சூப்பர் ஹீரோ கதையை உருவாக்க விரும்பினேன். மின்னல் முரளியால் அந்த கனவு நினைவாகியுள்ளது. இந்த வாய்ப்பை அளித்த வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனத்திற்கு நன்றி. டொவினோவின் அர்பணிப்பும், நெட்ஃபிளிக்ஸ் உடன் இணைந்தும் எங்கள் கனவு நினைவாக்க உதவியது” என்றார்.
இவரைத் தொடர்ந்து டொவினோ தாமஸ் கூறியதாவது, “மின்னல் முரளி படத்தின் கதை, ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக, அனைவரையும் திரையுடன் கட்டிபோட்டு வைக்கும்.
என்னுடைய கதாபாத்திரம் இதில் புதிரான புரியாத கதாபாத்திரமாக இருக்கும். சூப்பர்ஹீரோ மின்னல் முரளி எனப்படும் ஜெய்சன் பாத்திரத்தில் நடிக்கிறேன். இடியால் தாக்கபட்டு, சூப்பர் ஹீரோ சக்திகளை பெரும் ஒருவனது கதை. மின்னல் முரளி கதாபாத்திரத்தை செய்வது எனக்கு பெரும் சவாலாக இருந்தது.
பாசில் ஜோசப் உடைய பணி அளப்பறியது. உலகெங்கிலும் உள்ள மக்கள் எங்கள் திரைப்படத்தை காணப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.
வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில், ஷோபியா பால் கூறியதாவது, “நாங்கள் பெரும் சவால் தரக்கூடிய மிகச்சிறந்ததொரு படத்தை உருவாக்குவதை அறிந்திருந்தோம். இந்த முயற்சி இதுவரை நாங்கள் செய்திராத புதிய முயற்சி. மிககடினமான காலத்தில் இந்தத் திரைப்படத்தின் பயணம் மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது.
இதில் மிகப்பெரும் சாதனை என்பது இப்படக்குழுவுடன் இணைந்து, இப்படத்தை உருவாக்கியது தான். மின்னல் முரளியை நாம் விரும்பும் சூப்பர் ஹீரோவாக காண்பதற்கு, இப்படக்குழு இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பை தந்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: தேவாலய அரங்கை இடித்த இந்து பரிஷத் - பினராயி விஜயன் காட்டம்!