இதைப்பற்றி இப்போது கூற முக்கியக் காரணம் இன்று அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை'. இப்படம் முழுவதும் நீதிமன்ற வாளகத்தை சுற்றியே வருகிறது. ட்ரெய்லரில் குற்றவாளி கூண்டில் நிற்கும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மூன்று இளம் பெண்கள், அவர்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வாதாடும் வழக்கறிஞர்களின் உணர்ச்சிகரமான வசனங்களும், முன்வைக்கும் வாதங்களும் படத்தை பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தியில் அனிருத் ராய் சவுத்ரி இயக்கத்தில், அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோர் பெண்கள் பாதுகாப்பைப் பற்றியும், பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அவலங்கள் பற்றியும் கூறும்விதமாக பிங்க் திரைப்படம் அமைந்தது.
இப்போதுள்ள சமூக அவலங்களை பிரதிபலிக்கும் வாதப் பிரதிவாதங்கள், படம் முழுக்க காட்டப்பட்டிருக்கும். படத்தின் இறுதியில் நீதிபதி இந்த வழக்கின் இறுதி வாதத்தை வைக்கும்படி உத்தரவிடுவார். அப்போது அமிதாப் 'நோ' என்று செல்வார். இந்த 'நோ' என்ற வார்த்தைதான் இப்படத்தின் அடிநாதம் என்று படம் பார்த்தவர்களுக்குப் புரியும்.
இதன் ரீமேக்காகத்தான் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை வெளியாகியது. இதன் ஒரு கொண்டாட்டமாகத்தான் கடந்த சில நாட்களாக நாம் தமிழ் சினிமாவில் வெளியான நீதிமன்றம் தொடர்புடைய படங்களை சிறிய ரீவைண்ட் பார்த்தோம்.
அதன் மீத்தொடுப்புகள் (லிங்க்) கீழே...
#NKP'S: நியாயத்தை மீட்டெடுக்கும் 'மனிதன்' ஏழைகளுக்கு மகான்!
#NKP: பாசத்துக்கு சொந்தமானவள் இந்த 'தெய்வத்திருமகள்' - நீதிமன்ற ஸ்பெஷல்
#NKP - முரட்டு வக்கீலின் தாண்டவ முகம் 'எல்லாம் அவன் செயல்'
#NKP: ‘நூற்றுக்கு நூறு’ தமிழ் சினிமாவில் புத்திசாலித்தனமான படம்
#NKP: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு 'விதி' விலக்கு அல்ல
29 ஆண்டுகளுக்கு முன் மம்முட்டி பேசிய அழகு தமிழ் - 'மெளனம் சம்மதம்' கொண்டு வந்த டிரெண்ட்!
நீதிமன்றக் காட்சிகளை முன்னிலைப்படுத்தும் படங்கள் வெற்றி பெறக் காரணம், நீதிமன்றக் காட்சிகளை உயிரோட்டத்துடன் ரசிகர்கள் முன்பு வைக்கப்படுவதே! நேர்கொண்ட பார்வை வெளியாகி கலவையான விமர்சனங்களை தற்போது பெற்றுவருகிறது.
இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் நிறைய திரைப்படங்கள் நீதிமன்றத்தை கருவாக தாங்கிவந்தாலும் சில முக்கிய திரைப்படங்களை பார்க்கவே நமக்கு இங்கு பார்க்க முடிந்தது. விடுபட்ட படங்களை இனிவரும் காலங்களில் காண்போம்.