ETV Bharat / sitara

'பக்ரீத்' தினத்தன்று 'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ்-ரசிகர்கள் உற்சாகம் - அஜித்

தல அஜித் நடித்திருக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை
author img

By

Published : Mar 25, 2019, 7:40 PM IST

தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கி வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர்.

சென்ற மாதம் படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்முறையாக வழக்கறிஞர் வேடத்தில் அஜித் நடித்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மேலும், 'நேர்கொண்ட பார்வை' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து பக்ரீத் பண்டிகை தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியிடப்படுகிறது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் அறிவிப்பு வெளியான அடுத்த கனமே ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்

Nerkonda Paarvai August 10 th.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.