ETV Bharat / sitara

பிறந்தநாளன்றே வெளியாகவுள்ள செல்வராகவனின் திரைப்படம்! - selvaraghavan nenjam marappathillai release date

எஸ்.ஜே. சூர்யா நடித்து பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் குறித்த வெளியீட்டுத் தேதியை இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

nenjam marappathillai release date announced

author img

By

Published : Feb 8, 2021, 12:16 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிக்கும் இத்திரைப்படம் பல்வேறு நிதிப் பிரச்சினைகளால் வெளியாகாமல் இருந்தது. கடந்தாண்டு கரோனா தொற்றுப் பிரச்சினையால் படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே போனது.

இதனிடையே செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு விடுத்திருந்த நிலையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்தச் சூழலில் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் செல்வராகவன் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இதை ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்திய அவர், 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் இயக்குநருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து செல்வராகவனின் ரசிகர்கள் ஏகபோக குஷியில் உள்ளனர்.

மேலும் அதே தேதியில் செல்வராகவனின் பிறந்தநாளும் வருகிறது என்பதால் ரசிகர்கள் டபுள் கொண்டாட்டத்திற்குத் தயாராகியுள்ளனர்.

இதையும் படிங்க... விஜய் சேதுபதி வெளியிட்ட WWW பட டீசர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.