ஆல்பின் மீடியா புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்குமார் தயாரித்து நடித்துள்ள படம் ’நீ சுடத்தான் வந்தியா’. இதில் டிக்டாக் பிரபலமான இலக்கியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவர்களுடன் தங்கதுரை, கொட்டாச்சி, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
துரைராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு செல்வகணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (மார்ச்.11) சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தின் இயக்குநர் பேரரசு, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே.ராஜன், இலக்கியா மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விரைவில் படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டாணாக்காரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!