ETV Bharat / sitara

சீட்டிங் வழக்கில் சிக்கிய ‘நெடுஞ்சாலை’ பட நடிகர்!

'நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த பிரசாந்த் நாராயணனை சீட்டிங் வழக்கில் கேரள போலீஸ் கைது செய்துள்ளது.

prasanth narayanan
author img

By

Published : Sep 9, 2019, 6:28 PM IST

என். கிருஷ்ணா இயக்கிய ‘நெடுஞ்சாலை’ திரைப்படத்தில் மசானமுத்து எனும் மோசமான போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் பிரசாந்த் நாராயணன். இந்த படத்தின் மூலமாக இவர் கோலிவுட் திரையுலகுக்கு அறிமுகம். பாலிவுட்டில் ‘ஜல்’ , ‘மர்டர் 2’ உட்பட பல பிரபலமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் தாமஸ் பனிக்கர் அளித்த புகாரின் பேரில் கேரள போலீஸார் பிரசாந்தையும், அவரது மனைவி சோனாவையும் கைது செய்துள்ளனர்.

prasanth narayanan
பிரசாந்த் நாராயணன்

2017ஆம் ஆண்டு தாமஸ் பனிக்கர் தயாரித்த ‘ஒரு சினிமாக்காரன்’ எனும் மலையாள படத்தில் பிரசாந்த் போலீஸாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பிரசாந்த் தன்னுடைய மாமனார் செய்யும் தொழிலில் தாமஸை முதலீடு செய்யச் சொல்லியிருக்கிறார்.

அதனை ஏற்றுக்கொண்டு தாமஸும் ரூ. 1.20 கோடி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு பிறகுதான் தாமஸுக்கு பிரசாந்த் தன்னை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. அதன்பிறகு பணத்தை கேட்டபோது, பிரசாந்த் தர மறுத்து தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து தாமஸ் அளித்த புகாரின் பேரில், மும்பையில் இருந்த பிரசாந்தையும் அவரது மனைவி சோனாவையும் காவல் துறையினர் கைதுசெய்து கேரளா அழைத்து வந்தனர். தலசேரி கூடுதல் நீதிமன்ற அமர்வு, அவர்களை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Intro:Body:

Nedunchalai cop actor arrest in Mal Practice

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.