'படைவீரன்', 'காளி' போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை அம்ரிதாவுக்கு சமீபத்தில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது 'பிகில்' படத்தின் தென்றல் கதாபாத்திரம்தான்.
அதைத்தொடர்ந்து அவருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
சமீபத்தில் அம்ரிதா தனது பிறந்தநாளை 'பிகில்' படக்குழுவுடன் கொண்டாடியிருக்கிறார். ஆனால் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு படத்தின் நாயகி நயன்தாராவால் தவிர்க்கமுடியாத காரணத்தால் வரமுடியாத சூழல் ஏற்பட்டதால் அம்ரிதா சற்று வருத்தப்பட்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அம்ரிதாவை சர்ப்ரைஸ் செய்யும் வகையில் நயன்தாரா ஒரு கைக்கடிகாரத்தை அனுப்பியிருக்கிறார். இதனால் நெகிழ்ந்துப்போன அம்ரிதா அந்த கடிகாரத்தை படம் எடுத்து தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதையும் படிங்க: மோடியுடன் நீங்க மட்டும் எப்படி செல்பி எடுதீங்க? எஸ்.பி.பி. ஆச்சரியம்!