ETV Bharat / sitara

சமூக வலைதளங்களில் ஏன் கணக்கு இல்லை? - நயன்தாரா விளக்கம் - nayanthara movies

நடிகை நயன்தாரா, தான் ஏன் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது இல்லை என முதல்முறையாகத் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா
நயன்தாரா
author img

By

Published : Aug 16, 2021, 8:33 AM IST

'ராஜா ராணி' படத்திற்குப் பின் எந்தப் படத்தின் விளம்பரத்திலும் கலந்துகொள்ளாமல் இருந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று (ஆக. 15) ’நெற்றிக்கண்’ பட விளம்பரத்திற்காகப் பிரபல தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேட்டி கொடுத்த இவர், பல்வேறு விஷயங்கள் குறித்து ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது நயன்தாராவிடம் சமூக வலைதளங்களில் ஏன் கணக்கு இல்லை எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நயன்தாரா, "நான் ஒரு தனிமை விரும்பி. என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுக்குப் பகிர விரும்ப மாட்டேன். அதனால்தான் நான் சமூக வலைதளங்களில் கணக்குத் தொடங்கவில்லை.

நயன்தாரா
நயன்தாரா

இருப்பினும் நேரம் கிடைக்கும்போது, சமூக வலைதளங்களைப் பார்ப்பேன். அதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதை முழுமையாகப் பாசிட்டிவாகப் பயன்படுத்தினால், இன்னும் பெரிய வளர்ச்சி ஏற்படும். நெகட்டிவாகப் பதிவுசெய்வதைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’நெற்றிக்கண்’ திரைப்படம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விபத்தில் கண் பார்வை பறிபோன பெண்ணாக நடித்து அசத்தியிருக்கும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அது நிச்சயதார்த்த மோதிரம்: ஷாக் கொடுத்த நயன்தாரா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.