'நெற்றிக்கண்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தற்போது படக்குழு தொடங்கியுள்ளது.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் 'நெற்றிக்கண்'. இந்தப் படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், தனது ரௌடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் நயன்தாராவுடன் வடசென்னை சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார்.
விபத்தில் பார்வை இழந்த பெண், தனது அறிவாற்றலால் எப்படி கொடூரமான சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
-
A glimpse of the action behind the scenes of #Netrikann. Second schedule starts today! #Nayanthara @VigneshShivN @Rowdy_Pictures pic.twitter.com/PK3KDq7XRV
— Milind Rau (@Milind_Rau) October 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A glimpse of the action behind the scenes of #Netrikann. Second schedule starts today! #Nayanthara @VigneshShivN @Rowdy_Pictures pic.twitter.com/PK3KDq7XRV
— Milind Rau (@Milind_Rau) October 17, 2019A glimpse of the action behind the scenes of #Netrikann. Second schedule starts today! #Nayanthara @VigneshShivN @Rowdy_Pictures pic.twitter.com/PK3KDq7XRV
— Milind Rau (@Milind_Rau) October 17, 2019
முன்னதாக 'நெற்றிக்கண்' என்ற தலைப்பில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தை, இயக்குநர் பாலசந்தர் தனது கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.
இதையும் வாசிங்க: நயன்தாராவை எதிர்த்துப் பேசினேன் - நடிகர் பிரஜின் 'லவ் ஆக்ஷன் ட்ரமா' நினைவுகள்!