நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக, ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. இதனையடுத்து ரஜினியின் ’அண்ணாத்த’, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
இதனையடுத்து அவர் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை தயாரித்த அபிஷேக் பிலிம்ஸ் தொடர்ச்சியாகத் தயாரிக்கும் எட்டு படங்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதாக அவர் எந்தவித ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தனுஷின் நானே வருவேன் பட தலைப்பு மாறுகிறதா?