அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'ராக்கி' படம் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் அனைத்து உரிமையையும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்னர், விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ராக்கி படத்தை கண்டு மகிழ்ந்திருக்கிறார்.
தற்போது இவர்கள் இருவரும் சத்யம் சினிமாஸின் எஸ்கேப் தியேட்டரில் படம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த பாரதி ராஜா, வசந்த் ரவி ஆகியோரை அழைத்து, சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2021ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!