சென்னை: வெள்ளிப்போல் ஜொலித்த ஆடையுடன் வோக் போட்டோ ஷுட்டின் மேக்கிங் காணொலியை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
சூப்பர் செளத் என்ற தலைப்பில் தென்னிந்திய நடிகர்களைப் பெருமைப்படுத்தும்விதமான கட்டுரையை வெளியிட்டது வோக் பத்திரிகை. இதில் தென்னிந்திய நடிகர்களான மகேஷ்பாபு, நயன்தாரா, துல்கர் சல்மான் ஆகியோர் இந்த மாதத்துக்கான அட்டைப்படத்தில் இடம்பிடித்தனர்.

இதையடுத்து இவர்கள் மூவரையும் போட்டோ ஷுட் செய்த புகைப்படங்களையும் வெளியிட்டது. வோக் அட்டைப் படத்தில் இடம்பிடித்து முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்ற நயன்தாரா, அதன் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டார்.

கவர்ச்சியான உடையில் ஹாலிவுட் ஹீரோயின் போன்று தோற்றமளித்த நயன்தாராவின் வோக் போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது போட்டோ ஷுட்டுக்கு முன்னாள் நடந்த மேக்கிங் காணொலியை நயன் வெளியிட்டுள்ளார். இதில், வெள்ளி போன்ற மினுமினுப்பான ஆடை அணிந்து அவர் அமர்ந்திருக்க அவருக்கு மேக்கப் ஆர்டிஸ்டுகள் டச்-அப் செய்கின்றனர்.
-
PhotoShoot Session for Vogue India 🎥 pic.twitter.com/X3H7zjFDQC
— Nayanthara✨ (@NayantharaU) October 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PhotoShoot Session for Vogue India 🎥 pic.twitter.com/X3H7zjFDQC
— Nayanthara✨ (@NayantharaU) October 9, 2019PhotoShoot Session for Vogue India 🎥 pic.twitter.com/X3H7zjFDQC
— Nayanthara✨ (@NayantharaU) October 9, 2019
இந்தக் காணொலியைப் பார்த்து நயனின் அழகை புகழ்ந்து தள்ளுவதுடன், அவர் மீது தீராத அன்பு கொண்ட ரசிகர்கள் அதனை வைரலாக்கிவருகின்றனர்.