ETV Bharat / sitara

இணையத்தில் வெளியாகிறதா 'நரகாசூரன்' - புது அப்டேட் - நரகாசூரன் வெளியாகும் தேதி

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நரகாசூரன்' படம் இணையத்தில் வெளியாவது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Naragasooran
Naragasooran
author img

By

Published : Apr 18, 2020, 5:00 PM IST

Updated : Apr 20, 2020, 9:37 AM IST

'துருவங்கள் பதினாறு' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாள்களாக வெளியிடப்படாமல் இழுபறியில் இருந்துவரும் படம் 'நரகாசூரன்'.

இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஷ்ரத்தா என்டர்டெய்ன்மென்ட், ஒன்ராகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

'துருவங்கள் பதினாறு' படத்தைப் போன்று திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் 2018 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் படம் சில சிக்கல்களால் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே கார்த்திக் நரேன் அவரது மூன்றாவது படமான 'மாஃபியா சாப்டர் 1' படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

'நரகாசூரன்' படம் எப்போது வெளியாகும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவ்வப்போது கார்த்திக் நரேனிடம் கேள்விகளை எழுப்பிவந்தனர். அப்போது அவர் 2020 மார்ச் மாதம் வெளியாகும் என பதிலளித்திருந்தார்.

  • There have been many messages asking us about the streaming of Tamil Film #Naragasooran. It is NOT releasing on any OTT platforms as the streaming rights is yet to be acquired by any platform to date. pic.twitter.com/psIEndCcMc

    — LetsOTT GLOBAL (@LetsOTT) April 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே நரகாசூரன் இணையத்தில் வெளியாகும் என சமூகவலைதளத்தில் தகவல்கள் அதிவேகமாக பரப்பப்பட்டது. இதனிடையே LetsOTT GLOBAL தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் திரைப்படமான 'நரகாசூரன்' ஸ்ட்ரீமிங் பற்றி பல கேள்விகள் எங்களிடம் கேட்கப்பட்டது. இப்படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை இதுவரை எந்த தளமும் வாங்காததால் இது எந்த OTT தளத்திலும் வெளியாகாது என்று ட்விட் செய்துள்ளது.

விரைவில் நரகாசூரன் வெளியாகும் தேதி குறித்து படக்குழு நல்ல முடிவை அறிவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Last Updated : Apr 20, 2020, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.