'நான் ஈ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நானி. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் அவர், யதார்த்தங்களை மீறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறார். நானி முதல் முறையாக 'ஆவ்' என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா கெஸன்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இப்படம் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள், போதைப்பழக்கம், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பல வன்முறைகளையும் தோலுரித்து காட்டியது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஆவ் படத்திற்கு கிராஃபிக்ஸ் மற்றும் ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து நானி கூறுகையில், இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆவ் படத்திற்காக போஸ்டர் டிசைன் செய்வதில் இருந்து ஒரு காட்சியை வடிவமைத்த கிராஃபிக்ஸ் கலைஞர்களுக்கு மன நிறைவை தந்திருக்கும். இதுபோன்ற தரமான படத்தை தயாரித்ததில் பெருமையடைகிறேன் என்று தெரிவித்தார்.