ETV Bharat / sitara

'தபாங் 3' மூலம் நந்திதா பாலிவுட் என்ட்ரி! - சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் தபங் 3

சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'தபாங் 3' திரைப்படத்தில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு ‘அட்டகத்தி’ பட நடிகை நந்திதா ஸ்வேதா பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

nandita-swetha-
nandita-swetha-
author img

By

Published : Dec 17, 2019, 12:17 PM IST

அட்டகத்தி, எதிர் நீச்சல், முண்டாசுபட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நந்திதா. இவர் வைபவ் உடன் ’டாணா’, சிபிராஜுடன் ’கபடதாரி’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

இதனிடையே தற்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடிக்கும் 'தபாங் 3' திரைப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் திரையுலகில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். பல முன்னணி நடிகைகளுக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு நத்திதாவுக்கு பெரும் பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'தபாங் 3 படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு பின்னணி கொடுத்திருப்பது நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பிரபுதேவா, நடிகர் சல்மான்கான் ஆகியோருக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...

அமிதாப் பச்சனின் 'குலாபோ சிதாபோ' - புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.