ETV Bharat / sitara

சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' பட டீஸர் வெளியீடு! - 'நாடோடிகள் 2' டீஸர்

'நாடோடிகள் 2' படத்தின் டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'நாடோடிகள் 2' பட டீஸர் வெளியீடு!
'நாடோடிகள் 2' பட டீஸர் வெளியீடு!
author img

By

Published : Jan 25, 2020, 1:15 PM IST

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் 'நாடோடிகள்'. விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபினயா ஆகியோர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது.

இதையடுத்து 'நாடோடிகள் 2' படத்தை இயக்கும் வேலையில் சமுத்திரக்கனி இறங்கினார். அவரே நடித்து, இயக்கியுள்ள இப்படத்தில் சசி குமார், அதுல்யா ரவி, அஞ்சலி, பரணி ஆகியோர் நடித்துள்ளனர். 'நாடோடிகள் 2' படம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியும் இன்னும் படம் வெளியான பாடில்லை. ஒவ்வொரு முறையும் படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகும். ஆனால், சில பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும். தற்போது ஒருவழியாக இந்த மாதம் 31ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. சசிகுமார்- அஞ்சலி காதல் ஒரு பக்கம், மற்றொரு பக்கம், சசிகுமாரின் தூள்கிளப்பும் ஆக்ஷன் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லால் வெளியாகியுள்ள இந்த டீஸர், படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பெண்ணே.... பிகில் நாயகி அமிர்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Intro:Body:

Nadodigal 2 movie trailer

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.