சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'நானே வருவேன்'. கலைப்புலி தாணு தயாரிப்பில் படப்பிடிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் தனுஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். இந்தப் புகைப்படத்தைக் கண்ட ரசிகர்கள், தனுஷ் முகத்தில் சந்தோஷம் இருந்தாலும், ஒருவித கவலையும் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
எனக்குத் தெரிந்தது எல்லாம் சினிமா மட்டுமே, சினிமாவைத் தாண்டி எனக்கு எதுவும் தெரியாது என்று பலமுறை கூறியிருக்கிறார் தனுஷ். காதல் மனைவி ஐஸ்வர்யாவைப் பிரிந்ததிலிருந்து, படப்பிடிப்புத் தளம் மட்டுமே அவரது முகத்தில் சிறு புன்னகையை உண்டாக்கியுள்ளது.
பிரிவு அறிவிப்புக்குப் பின்னர் தனது முழு கவனத்தையும் திரைப்படங்களில் நடிப்பதில் செலுத்தியுள்ளார் தனுஷ். முன்னதாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துவந்தார்.
தற்போது 'நானே வருவேன்' ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். விரைவில் தனுஷ் வாழ்வில் அனைத்துப் பிரச்சினைகளும் நீங்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: முத்த மழையில் நனையும் இந்திய நட்சத்திரங்கள்! - முத்த நாள் 2022