ETV Bharat / sitara

நா. முத்துக்குமார் - யாரும் பார்க்காத தருணங்களை வேடிக்கை பார்த்தவன்

author img

By

Published : Jul 12, 2021, 12:00 AM IST

அவரின் கண்களில் எப்போதும் பல இரவுகளின் தூக்கம் மிச்சம் இருக்கும். ஆனால், பல இரவுகளின் தூக்கத்தை மிச்சம் வைத்திருந்த அவரது கண்கள்தான் பல தருணங்களை மிச்சம் இல்லாமல் தன்னுள் வைத்திருந்தது.

நா முத்துக்குமார்
நா முத்துக்குமார்

கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்கள் வாழ்க்கையின் அனைத்து தருணங்களையும், தருணங்களுக்கும் எழுதியதால் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நா. முத்துக்குமாரும் ஒருவர்

வாலி, வைரமுத்து அலைக்கு பிறகு நா. முத்துக்குமார், தாமரை, பா. விஜய், சினேகன் என பெரிய கவிஞர் பட்டாளம் சினிமாவுக்குள் நுழைந்தது.

நா முத்துக்குமார்

அந்தப் பட்டாளத்தில் நா. முத்துக்குமார் முக்கியமானவர். ஏனெனில், அவசரமாய் ஓடும் எவரும் பார்க்க மறக்கும் தருணங்களை அவர் தலைமுறை பாடலாசிரியர்களில் முத்துக்குமார் மட்டுமே அதிகம் கவனித்து பாடல்களாக்கினார்.

காதல் கொண்டேன் திரைப்படத்தில், உன்னை தோழி என்பதா என் பாதி என்பதா என்ற பாடலில், “மழை நின்றபோதிலும் மரக்கிளைகள் தூறுதே” என்ற வரிகள் எழுதி, தான் ஒரு தேர்ந்த கவனிப்பாளன் என்று உணர்த்தியிருப்பார்.

நா முத்துக்குமார்

வானத்தை விலை பேசும் மனிதர்கள் மத்தியில் நா. முத்துக்குமாரால் மட்டும்தான் வெறும் தரையில் படுத்து விண்மீன் பார்ப்பது யோகமடா என்று எழுத முடிந்தது.

குறிப்பாக, பூக்கள் பூக்கும் தருணம் பாடலில், “காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே” என்று எழுதி பறவை இருக்கும் தருணத்தையும், பறக்கும் தருணத்தையும்விட, பறவை மறைந்தாலும் கிளை நடனம் ஆடும் தருணத்தில்தான் பெரும் காதல் அடைந்திருக்கிறது என்ற அழகிய தருணத்தை தந்தவர்.

நா முத்துக்குமார்

சக மனிதனை கவனிக்க மறந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தை பார்த்துக்கொண்டிருந்த நா. முத்துக்குமார்தான், சின்னஞ்சிறிய புல்லின் பனியில் தெரியும் மலையை கவனித்து, “சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை” என்று எழுதினார்.

திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஒரே பாடலாசிரியருக்கு கொடுக்க வேண்டுமென்ற கருத்து இன்றளவும் வைக்கப்படுகிறது. யுவன், ஜிவி உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே ஒரு படத்தின் முழு பாடல்களையும் நா. முத்துக்குமார் அதிகம் எழுதியிருக்கிறார்.

நா முத்துக்குமார்

அதை தவிர்த்து பார்த்தால் பல படங்களில் ஒற்றை பாடல் மட்டுமே எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ஒரு பாடலிலும் அவர் மற்ற கவிஞர்களைவிட தனது தனித்துவத்தை காட்டியிருக்கிறார்.

கஜினி திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரே பாடலான சுட்டும் விழி சுடரேவில், ‘கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டா உன் கண்ணில் நான் கண்டேன்’ என்று காதலியின் கண்களை அவர் கண்கள் மட்டும்தான் கறுப்பு வெள்ளை பூக்களாக பார்த்தது.

கவிஞன் என்பவன் தன்னுள் எவ்வளவு ஆழமாக செல்கிறானோ அதே அளவு முக்கியம் தன்னுடன் இயல்பில் புழங்குபவைகளை தன் கவிதை கருவில் சேர்த்துக்கொள்வது. அதை நா. முத்துக்குமார் தவறாமல் செய்துகொண்டே இருந்தார்.

நா முத்துக்குமார்

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நா. முத்துக்குமார் தனது கவிதைக்கு, வானத்தை விலை பேசாமல் விண்மீன்களை கவனித்தார், மழையில் மட்டும் இல்லாமல் மழை நின்ற பிறகும் மர கிளைகளை கவனித்தார். யாரும் பார்க்காத தருணங்களை வேடிக்கை பார்த்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.