ETV Bharat / sitara

'என் பெயரை பயன்படுத்தியது தவறான அணுகுமுறை’ - இயக்குநர் பாரதிராஜா

சென்னை: தன்னை கேட்காமல் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ள அறிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அது தவறான அணுகுமுறை என்றும் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா
author img

By

Published : May 12, 2020, 10:02 AM IST

கரோனா வைரஸ் காரணமாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தயாரிப்பாளர்களுக்கு இடையே பிரச்னை நிலவுவதாக கூறப்படுகிறது. இதையொட்டி திரையுலக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக நேற்று தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அந்தக் குழுவில் இயக்குநர் பாரதிராஜாவின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த குழுவில் தனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், தேனியில் இருக்கும் தன்னிடம் இது குறித்து யாரும் கலந்து பேசவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “முன்னாள் தலைவர்கள் அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப் பட்டியலொன்றும், அதனோடு சேர்ந்த அறிக்கையும் பத்திரிகைச் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. நாகரீகம் என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது. ஆனால் நான் அறியாமல் எனது பெயரைப் பயன்படுத்தியது சரியல்ல. தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்துகொள்ளாது, சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்னையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை.

பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல், எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்' - தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.