ETV Bharat / sitara

’தேசத்தைவிட மொழிதான் முக்கியம்’ - ஜி.வி.பிரகாஷ் - பெருங்காற்றே

சென்னை: ”மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழிதான் முக்கியம்” என சுதந்திர தின சிறப்பு பாடல் அறிமுக விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார்
ஜி.வி.பிரகாஷ்குமார்
author img

By

Published : Jul 31, 2021, 11:54 AM IST

இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.

12 மொழிகளில் உருவாகும் பாடல்

அதன் ஒரு பகுதியாக 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக ’பெருங்காற்றே’ எனும் பாடல் உருவாகி வருகிறது.

தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்தப் பாடல் உருவாகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் படப்பிடிப்பு

இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்படக் கலைஞர்களும் விளையாட்டு வீரர்களும் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்படவிருக்கிறது.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.

இப்பாடல் படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக ’கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ்’ (Connecting India With Colors) என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு 'கேன்வாஸ் பெயிண்டிங்’ ஒன்றும் வரையப்படுகிறது.

தமிழ்நாடு தொடங்கி இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் இதில் வரையப்பட உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர் இந்தப் படத்தை வரைகிறார்கள். இந்த உலக சாதனை Guinness book of records, limca book of records and Asian book of records ஆகியவற்றில் பதிவு செய்யப்பட உள்ளது.

விரைவில் மோஷன் போஸ்டர்

இந்நிலையில், இந்தப் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது ஆண்டு விழாவான செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

இவ்விழாவில், வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது. மேலும் வ.உ.சியின் 150ஆவது ஆண்டைக் குறிக்கும் பொருட்டு உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகமும் வெளியிடப்படவிருக்கிறது.

பாடல் அறிமுக விழாவில் ஜி.வி

இந்நிலையில், இந்நிகழ்வுகளின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ”நாம் மொழிக்காக போராடி வென்றுள்ளோம். மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழிதான் முக்கியம்” என்றார்.

ஜி.வி.பிரகாஷின் இந்தப் பேச்சுக்கு தற்போது பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: ’மாஸ்டர் ஆஃப் பொலிட்டிகல் சட்டயர்’ மணிவண்ணன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.