ETV Bharat / sitara

மாமன்னர் அசோகர் ஒரு சித்தாந்தம் - டி.எம்.கிருஷ்ணா - அசோக மன்னரின் கட்டளைகள்

எல்லா மதமும் சமம், நீதி மற்றும் நிர்வாகத் திறன் என அனைத்தும் அசோகரின் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை மக்களுக்கு எடுத்துச் செல்லவே 'அசோகர் கட்டளைகள்' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளோம் என்று கர்நாடக இசை அறிஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

t.m.krishna
t.m.krishna
author img

By

Published : Oct 18, 2020, 6:26 PM IST

Updated : Oct 19, 2020, 10:51 PM IST

மாமன்னர் அசோகரின் கட்டளைகள் அடங்கிய கல்வெட்டுக்களின் மாண்புகளை கர்நாடக இசை மூலம் மக்களுக்கு எடுத்துச் செல்ல கர்நாடக இசை அறிஞர் டி.எம்.கிருஷ்ணா 'அசோகர் கட்டளைகள்' என்னும் காணொலித் தொகுப்பை அம்பேத்கர் புத்தம் தழுவிய நாளான அக்டோபர் 14 ஆம் தேதி வெளியிட்டார்.

இது இசை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் கட்டளைகள் இசை மூலம் தொகுத்து வழங்கப்படுவது, இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டி.எம்.கிருஷ்ணா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், "தற்போது நாட்டில் வன்முறை சூழ்நிலை நிலவி வருகிறது. அரசியல் ரீதியாக வன்முறை நடந்து வருகின்றது. பிறருக்கும் கருத்துள்ளது என்பதை யாரும் பொறுத்து கேட்பதில்லை. இந்தச் சூழ்நிலையில் அசோகரின் தத்துவங்கள் இன்று தேவைப்படுகிறது என்று எனக்கு மனதில் பட்டது.

பிராகிருதம் மொழியில் அசோகர் கட்டளைகள்

இதை மக்களிடம் கொண்டு செல்வதின் மூலம் அசோகர் காலத்தில் இருந்த சிந்தனையை தற்போது மக்களிடம் எடுத்து வர முடியும். அசோகரின் வார்த்தைகள் மிகவும் முக்கியம், அது நிச்சயம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். நான் பாடியிருப்பது பிராகிருதம் மொழியில், விரைவில் தமிழ், இந்தி, வங்காளம் உள்ளிட்ட அனைத்து மக்களிடமும் இதைக் கொண்டு செல்ல வேண்டும். பிராகிருதம் மொழி மக்களின் மொழியாக இருந்துள்ளது.

அசோகர் காலத்தில் மக்கள் பேசிய மொழி. இது மேல்தட்ட மக்களின் மொழி இல்லை. பிராகிருதம் மொழியைப் புரிந்து கொள்ள எனக்கு பௌத்த துறவி தமிக்க என்பவரும், பிராகிருதம் மொழி அறிஞர் பேராசிரியர் நரேஷ் கீர்த்தி என்பவரும் வழிகாட்டியாக இருந்து உதவினார்கள்.

பெளத்தம் வழியை பின்பற்றிய அசோகர், அம்பேத்கர்

அந்த மொழி எப்படி இருக்க வேண்டும், வார்த்தைகள் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எனக்கு வழிகாட்டினர். அசோகரின் கட்டளைகளை அக்டோபர் 14ஆம் தேதி வெளியிட்டதற்கு காரணம், அன்று தான் அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறினார். அசோகரின் அரசியல் சிந்தனைகள் வேறுவிதமாக இருந்தது, அம்பேத்கரின் சிந்தனைகளும் அடித்தட்டு மக்களுக்கானதாக இருந்தது. இருவரும் பௌத்த மதத்தின் மீது பற்று ஏற்பட்டு, பொது வாழ்வில் இருந்தவர்கள். அதனால், அவர்கள் இருவரையும் இணைக்க அக்டோபர் 14ஆம் தேதியை தேர்வு செய்தேன்.

37 இடங்களில் அசோக மன்னரின் கட்டளைகள்

இன்றைய சமூக சூழலுக்கு மாமன்னர் அசோகர் தேவைப்படுகிறார்

அசோகர் கட்டளைகள் எனக்குச் சொந்தம் இல்லை. இதை பலதரப்பட்ட மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அசோக மன்னரின் கட்டளைகள் கானா, கூத்து போன்றவைகளில் கொண்டு வரலாம். இதற்கு எனக்கு ராயல்டி இல்லை. இந்தியாவில் மட்டும் இல்லாமல் நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் என 37 இடங்களில் மொத்தம் 100க்கும் மேல் கட்டளைகள் உள்ளன. இது வெவ்வெறு விதத்தில் வெளிவர வேண்டும். இது வெறும் ஆரம்பம் தான்.

எல்லா மதமும் சமம்:

இன்று உள்ள அரசியல் வன்முறையாக உள்ளது. வெறும் கொலை மட்டும் வன்முறை இல்லை. கற்பழிப்பு, கொலை நடக்கும் சூழல் இருந்தால், அதுவும் முழு சமுதாயத்திற்கும் தான் பொறுப்பு. நாம் தான் சமுதாயத்தை கட்டமைக்கின்றோம். தற்போது பேசுவதற்கே பலர் பயப்படுகின்றனர். எனவே, எல்லா மதமும் சமம், அன்பு, நீதி, அமைதி போன்றவை அசோகரின் கட்டளைகள் மூலம் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய தேவை தற்போது நிச்சயமாக உள்ளது' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய அவதாரம் எடுத்த பிரபல நடிகை - 50 பெண் பிரபலங்கள் பாராட்டு

Last Updated : Oct 19, 2020, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.