ETV Bharat / sitara

"மக்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம்" - எஸ்.பி.பி குறித்து இசையமைப்பாளர் தேவா! - Latest kollywood news

எஸ்.பி.பி நலமுடன் மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்று இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.

தேவா
தேவா
author img

By

Published : Aug 17, 2020, 3:28 PM IST

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இச்செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டும் எனவும் அவரது மகன் எஸ். பி. சரண் தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டி பிரபல இசையமைப்பாளர் தேவாவும், அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பேசியுள்ள தேவா, "எஸ்.பி.பி நலமுடன் மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்று இந்த உலக மக்களோடு சேர்ந்து நாங்களும் தினமும் அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். முன்னர் இருந்தது போலவே அவர் திரும்ப வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, "நீங்கள் சீக்கிரமாக வர வேண்டும், நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். இந்த உலகமே உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. உங்களை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று பேசியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.