இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
தற்காலிகமாக '#RC15' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 50ஆவது படமாகும்.
-
It’s from the Year 2000 till 2021 I have been witnessing @shankarshanmugh Sir
— thaman S (@MusicThaman) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
the Way he thinks Imagine the Science & life beyond Cinema ❤️I am Still Seeing the Same Energy and the Aura behind this Wonderful Human❤️.Happy to be Part of the TEAM for #RC15 as #Composer#Godbless pic.twitter.com/4EloKA68XN
">It’s from the Year 2000 till 2021 I have been witnessing @shankarshanmugh Sir
— thaman S (@MusicThaman) July 19, 2021
the Way he thinks Imagine the Science & life beyond Cinema ❤️I am Still Seeing the Same Energy and the Aura behind this Wonderful Human❤️.Happy to be Part of the TEAM for #RC15 as #Composer#Godbless pic.twitter.com/4EloKA68XNIt’s from the Year 2000 till 2021 I have been witnessing @shankarshanmugh Sir
— thaman S (@MusicThaman) July 19, 2021
the Way he thinks Imagine the Science & life beyond Cinema ❤️I am Still Seeing the Same Energy and the Aura behind this Wonderful Human❤️.Happy to be Part of the TEAM for #RC15 as #Composer#Godbless pic.twitter.com/4EloKA68XN
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 'பாய்ஸ்' படத்திற்கு பின் தமன் - ஷங்கர் இருவரும் இப்படத்தின் மூலம் இணைகின்றனர். ஐதராபாத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் இரண்டு பாடல்களின் படப்படிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2001ஆம் ஆண்டு 'முதல்வன்' பட ரீமேக்கை இந்தியில் 'நாயக்' என்ற பெயரில் எடுத்தார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார். இதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ் அல்லாத வேற்று மொழி ஹீரோவை ஷங்கர் இயக்கவுள்ளார்.
'#RC15' படத்தின் கதை குறித்தான விவாதம் சமீபத்தில் இறுதியானது. இதனையடுத்து படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்புக்கு தயாராகவுள்ளனர்.
இதையும் படிங்க: ராஜமௌலியின் 'RRR' - மகனை பார்த்து கண்கலங்கிய சிரஞ்சீவி!