ETV Bharat / sitara

ஜி.வி.பிரகாஷின் புதிய பட அப்பேட் - 100 percent kadhal

அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே உடன் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 100 சதவீதம் காதல் படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

100 சதவீதம் காதல்
author img

By

Published : Apr 13, 2019, 7:26 AM IST

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் அப்படத்தில் இடம்பெற்ற 'வெயிலோடு விளையாடி' பாட்டு மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். ரஜினியின் குசேலன், விஜயின் தலைவா, ஆர்யாவின் மதராசபட்டினம் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், தலைவா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் திரையில் தோன்றிய அவர் அதன்பின்பு டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, நாச்சியார், செம என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த வாட்ச்மேன் படம் நேற்று வெளியானது. இதையடுத்து அர்ஜூன் ரெட்டி பட புகழ் ஷாலினி பாண்டே உடன் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 100 சதவீதம் காதல் திரைப்படம் மே மாதம் வெளியாக இருக்கிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.