நடிகர் விக்ரம் 'டிமாண்டி காலனி' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகிவரும் படம் 'விக்ரம் 58' என்ற பெயரில் அறியப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில் கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' பட வரிசையில் திரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் 'விக்ரம் 58' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இப்படத்திற்கு 'கோப்ரா', 'அமீர்' என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலை இன்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிடுகிறது.
-
Merry christMAS(S) everyone!!🎄😍
— Seven Screen Studio (@7screenstudio) December 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
#Chiyaanvikram58 @AjayGnanamuthu @IrfanPathan @SrinidhiShetty7 @Lalit_SevenScr @arrahman @sooriaruna @iamarunviswa @proyuvraaj @SonyMusicSouth @Jagadishbliss pic.twitter.com/FOsqxYDx2I
">Merry christMAS(S) everyone!!🎄😍
— Seven Screen Studio (@7screenstudio) December 25, 2019
#Chiyaanvikram58 @AjayGnanamuthu @IrfanPathan @SrinidhiShetty7 @Lalit_SevenScr @arrahman @sooriaruna @iamarunviswa @proyuvraaj @SonyMusicSouth @Jagadishbliss pic.twitter.com/FOsqxYDx2IMerry christMAS(S) everyone!!🎄😍
— Seven Screen Studio (@7screenstudio) December 25, 2019
#Chiyaanvikram58 @AjayGnanamuthu @IrfanPathan @SrinidhiShetty7 @Lalit_SevenScr @arrahman @sooriaruna @iamarunviswa @proyuvraaj @SonyMusicSouth @Jagadishbliss pic.twitter.com/FOsqxYDx2I
விக்ரம் இப்படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.