தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து மாநிலத்தில் தொற்று பரவல் குறைய ஆரம்பித்த நிலையில், நான்கு மாதங்கள் கழித்து கடந்த வாரம் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன.
திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட ஆரம்பித்தனர். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடியில் வெளியானதால், திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், ஓடிடியில் வெளியான படங்களைத் திரையரங்குகளில் இனிமேல் திரையிடுவதில்லை. ஓடிடிக்கு விற்பனையான படங்களின் ப்ரிவியூ காட்சிளும் திரையரங்குகளில் வெளியிடப்படாது என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்யதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் திரையரங்குகளில் படம் வெளியான 4 வாரங்கள் கழித்தே அப்படம் ஓடிடியில் வெளியிடத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.