சுசீந்திரன் கடைசியாக சிம்பு, நிதி அகர்வாலை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
'ஈஸ்வரன்' படத்தை இயக்குவதற்கு முன்பே சுசீந்திரன் இரண்டு படங்களுக்கான பணிகளைத் தொடங்கினார். அதில் ஒன்று ஜெய் நடிப்பில் உருவாகி வரும் சிவ சிவா. இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக மட்டுமல்லாது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
'சிவ சிவா' படத்தில் ஜெய்க்கு நாயகியாக மீனாட்சி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் கெளதம் மேனன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
-
Here’s the 1st look & motion poster of #ShivaShivaa https://t.co/5ReQ3NvZTq
— Gauthamvasudevmenon (@menongautham) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Best wishes on your musical debut @Actor_Jai
Always knew you had music in you#Susienthiran @meenakshigovin2 @VelrajR @mukasivishwa @lendi_studios @ajay250193 @saregamasouth @DoneChannel1 @gobeatroute
">Here’s the 1st look & motion poster of #ShivaShivaa https://t.co/5ReQ3NvZTq
— Gauthamvasudevmenon (@menongautham) August 6, 2021
Best wishes on your musical debut @Actor_Jai
Always knew you had music in you#Susienthiran @meenakshigovin2 @VelrajR @mukasivishwa @lendi_studios @ajay250193 @saregamasouth @DoneChannel1 @gobeatrouteHere’s the 1st look & motion poster of #ShivaShivaa https://t.co/5ReQ3NvZTq
— Gauthamvasudevmenon (@menongautham) August 6, 2021
Best wishes on your musical debut @Actor_Jai
Always knew you had music in you#Susienthiran @meenakshigovin2 @VelrajR @mukasivishwa @lendi_studios @ajay250193 @saregamasouth @DoneChannel1 @gobeatroute
இதில் ஜெய் கையில் அரிவாள் முகத்தில் ரத்த காயங்களுடன் ஆக்ரோசமாக காணப்படுகிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை அறிமுக தயாரிப்பாளர் ஐஸ்வர்யா லெண்டி ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார். தனது 30ஆவது படமாக உருவாக இந்தப் படத்தில் ஜெய் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். ஜெய், இசையமைப்பாளர் தேவாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சண்டைக்காட்சியில் நேர்ந்த விபரீதம்... மீண்டு வந்த ஜெய்!