ETV Bharat / sitara

இரவோடு இரவாக ஹேக் செய்யப்பட்ட 15 யூ-ட்யூப் சேனல்கள் - பரிதாபங்கள் ஹேக்

தமிழ்நாட்டில் பிரபல யூ-ட்யூப் சேனல்களான பரிதாபங்கள், நக்கலைட்ஸ் உள்ளிட்டவை ஹேக் செய்யப்பட்டன.

யூ-ட்யூப் சேனல்கள்
யூ-ட்யூப் சேனல்கள்
author img

By

Published : Jan 7, 2022, 9:01 PM IST

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக யூ-ட்யூப் கலாசாரம் அதிகரித்துவருகிறது. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும்வரை தாங்கள் செய்யும் வேலைகளை எல்லாம் காணொலியாக எடுத்து யூ-ட்யூப் பக்கங்களில் வெளியிட்டு வருமானம் பார்க்கின்றனர்.

மறுபக்கம் அரசியல் நிகழ்வுகளைக் கலாய்ப்பது, நகைச்சுவைக் காணொலிகள் எடுப்பது என புதுப்புது கான்செப்ட்டுகளை யோசித்து சேனல்களில் காணொலியாக வெளியிடுகின்றனர்.

இதனிடையே பரிதாபங்கள், நக்கலைட்ஸ், அர்பன் சென்னை மீம்ஸ் உள்ளிட்ட 15 சேனல்கள் நேற்றிரவு (ஜனவரி 6) அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் குக் வித் கோமாளி கனியின் சமையல் சேனல் உள்ளிட்ட சிறிய சேனல்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

மேலும் முடக்கப்பட்ட அனைத்து சேனகளிலும் கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.