ETV Bharat / sitara

மீண்டும் இணைந்த 'த்ரிஷ்யம்' கூட்டணி: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

author img

By

Published : Jul 5, 2021, 12:58 PM IST

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் '12TH MAN' திரைப்படத்தில் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் த்ரிஷ்யம் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது.

mohanlal
mohanlal

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'த்ரிஷ்யம்'.

திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்தப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது சீனாவிலும் இந்தப்படம் சில திருத்தங்களுடன் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரும் வெற்றியைப்பெற்றது.

ஓடிடியில் வெற்றிபெற்ற த்ரிஷ்யம் 2

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படம் மோகன்லாலின் திரையுலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றது.

இதனைத்தொடர்ந்து 'த்ரிஷ்யம் 2' படமும் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றியைப்பெற்றது. இந்தப்படமும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப்படத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார். விரைவில் இந்தப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நிறுத்திவைக்கப்பட்ட ராம்

'த்ரிஷ்யம் 2' திரைப்படத்திற்கு முன்பாக ராம் என்னும் படத்தை மோகன் லாலை வைத்து ஜீத்து ஜோசப் இயக்கத் தொடங்கினார். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படப்பிடிப்பு, ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், சில காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

'12TH MAN' ஃபர்ஸ்ட்லுக்

இந்தநிலையில், மீண்டும் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி இணைந்துள்ளது. '12TH MAN' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்தப்படம் த்ரிஷ்யம் படத்தின் அடுத்த பாகமாக இல்லாமல், புதிய த்ரில்லர் கதையில் உருவாகவுள்ளது.

இந்தப்படத்தையும் த்ரிஷ்யம் படங்களின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரே தயாரிக்கிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன்லால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் நடிக்க உள்ள மற்ற கதாபாத்திரங்களின் தேர்வுகள் நடைபெற்றுவருகிறது.

இந்த தேர்வு முடிந்தவுடன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மொதல்ல ஓடிடி, இப்ப திரையரங்கு- கலக்கும் 'த்ரிஷ்யம் 2'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.