மோகன்லால் - இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் பிரம்மாண்ட பொருள்செலவில் உருவாகிவரும் திரைப்படம் 'மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்'.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஜாமோரின் கடற்படைத் தலைவரான குஞ்ஞாலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகர்கள் நெடுமுடி வேணு, முகேஷ், சித்திக், இயக்குநர் ஃபாசில், ரெஞ்சி பணிக்கர், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ஆஷிர்வாத் சினிமாஸ், மூன் ஷாட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் கான்ஃபிடன்ட் குரூப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
ரோனி ரபேல், ராகுல்ராஜ், அங்கித் சூரி, லெய்ல் இவான்ஸ் ரோய்டர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புப் பணிகள் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றன.
5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மார்ச் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், புத்தாண்டையொட்டி 'மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
-
First look poster of the much-awaited 'Marakkar - Arabikadalinte Simham'. Here you go! .
— Mohanlal (@Mohanlal) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
.#marakkararabikadalintesimham #marakkar #happynewyear #2020 https://t.co/FmhoYPFihx
">First look poster of the much-awaited 'Marakkar - Arabikadalinte Simham'. Here you go! .
— Mohanlal (@Mohanlal) December 31, 2019
.#marakkararabikadalintesimham #marakkar #happynewyear #2020 https://t.co/FmhoYPFihxFirst look poster of the much-awaited 'Marakkar - Arabikadalinte Simham'. Here you go! .
— Mohanlal (@Mohanlal) December 31, 2019
.#marakkararabikadalintesimham #marakkar #happynewyear #2020 https://t.co/FmhoYPFihx
உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.