தமிழில் வெளியான 'இருவர்', 'சிறைச்சாலை' ஆகிய படங்களில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகர் மோகன்லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லூசிஃபர்' படம் கோலிவுட்டிலும், மல்லுவுட்டிலும் செம்ம கலெக்ஷனை அள்ளியது.
இதனையடுத்து நடிகர் மோகன்லால், இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'மரைக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்' என்ற படத்தில் நடித்துவருகிறார். கேரளாவில் வாழ்ந்து வந்த கடற்படைத் தலைவர்களை 'குஞ்சலி மரைக்கார்' என்று அழைப்பர். இப்படத்தில் மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, பிரணவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளத்தில் மார்ச் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.
-
A friendship that made countless dreams come true.. then, later and even now. Together, hand-in-hand with @priyadarshandir pic.twitter.com/FtLF3eHvpr
— Mohanlal (@Mohanlal) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A friendship that made countless dreams come true.. then, later and even now. Together, hand-in-hand with @priyadarshandir pic.twitter.com/FtLF3eHvpr
— Mohanlal (@Mohanlal) November 17, 2019A friendship that made countless dreams come true.. then, later and even now. Together, hand-in-hand with @priyadarshandir pic.twitter.com/FtLF3eHvpr
— Mohanlal (@Mohanlal) November 17, 2019
மோகன்லாலின் திரைப்பயணத்தில் மிகமுக்கியமானவர் பிரியதர்ஷன். இவர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படங்கள் பல விருதுகளையும் பல பெயர்களையும் பெற்றுதந்துள்ளது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பிரியதர்ஷுடன் மோகன்லால் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் 'எண்ணற்ற கனவுகளை நனவாக்கிய ஒரு நட்பு இப்போதும் எப்போதும் என்றென்றும்' என பதிவிட்டுள்ளார்.