ETV Bharat / sitara

உங்கள் வார்த்தை நிறைவைத் தருகிறது - கமலுக்கு மோகன்லால் நன்றி! - கமலுக்கு நன்றி கூறிய மோகன்லால்

உங்கள் கனிவான வார்த்தைக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன் எனக் கமலின் பிறந்தநாள் வாழ்த்து செய்திக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.

mohanlal
mohanlal
author img

By

Published : May 22, 2020, 4:34 PM IST

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நேற்று (மே 21) தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதன்படி, நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "அன்புள்ள மோகன்லால், உங்கள் முதல் படத்திலிருந்தே உங்களை நேசிக்கிறேன். உங்கள் பணியின் தரத்தைக் கண்டு பொறாமை கொண்டேன்.

நான் உங்களோடு சேர்ந்து பணிபுரிகையில் இன்னும் அதிகமாக உங்களை நேசித்தேன். நீடுழி வாழ்க என் இளைய சகோதரா" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பார்ந்த கமல் அவர்களே உங்கள் கனிவான வார்த்தைக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். உங்களைப் போன்ற ஒரு அற்புதமான நடிகர் நிகரற்ற அர்ப்பணிப்பு, திறமை கொண்டவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வருவது நிறைவைத் தருகிறது.

  • Dear Kamal Sir, I am humbled and grateful for your kind words. Coming from a thespian actor of unparalleled talent and commitment like you it is very gratifying and will encourage me on my journey forward. Thank you and God bless https://t.co/HW9psKjItS

    — Mohanlal (@Mohanlal) May 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது எனது பயணத்தின் முன்னே செல்ல இன்னும் என்னை ஊக்கப்படுத்தும். நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் வரும் ஜார்ஜ் குட்டி: 'த்ரிஷ்யம் 2' அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.