கேரளாவில் வாழ்ந்து வந்த கடற்படைத் தலைவர்களை குஞ்சலி மரைக்கார் என்று அழைப்பர். குஞ்சலி மரைக்காரின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில் படமாக உருவாக்கியுள்ளனர். மோகன்லால் மரைக்காரராக வித்தியாசமாக நடித்துள்ளார். 'மரைக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
![marrakar arabikadalinte simham](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4642913_mohanlal.jpg)
கீர்த்தி சுரேஷ், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, பிரணவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது. படம் அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது என்று மோகன்லால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'காப்பான்' பட 'செட்' வடிவமைப்பு புகைப்படங்கள்!