தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.
அந்தவகையில் விஷ்ணு விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் 'மோகன் தாஸ்' என்ற படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். 'களவு' பட இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கிய, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மோகன் தாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் மோகன் தாஸ் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், விஷ்ணு விஷால் புதிரான- அழுத்தமான- அர்த்தத்துடன் கூடிய சிரிப்புடன் இருக்க, அவரது கையில் ரத்தம் தோய்ந்த ஆயுதம் ஒன்றும் இருக்கிறது.
அத்துடன் மூன்று குரங்குகள், பொம்மைகளாக தொங்கிக் கொண்டிருக்க, நான்காவதாகக் குரங்கு மட்டும் ரத்த கறையுடன் கீழே விழுந்ததுபோல் அமைந்திருக்கிறது.
அடுத்த ஆண்டு கோடையில் 'மோகன் தாஸ்' படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை மீது வழக்கு