ETV Bharat / sitara

HBD மோகன்: 80களின் வெள்ளி விழா நாயகன் - latest cinema

80கள் சினிமா காலக்கட்டத்தில் ஒரு நடிகருடன் தங்கள் மகள்கள் நடித்தால் கொஞ்சமும் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கலாம் என ஹீரோயின்களின் அம்மாக்களால் புகழப்பட்ட ரத்தின நடிகர் மோகன். இதனை நடிகை சுஹாசினி ஒரு பேட்டியில் பெருமையுடன் பகிர்ந்திருப்பார்.

HBD மோகன்: 80களின் வெள்ளி விழா நாயகன் மோகன்!
வெள்ளி விழா நாயகன் மோகன்
author img

By

Published : Aug 23, 2021, 7:55 AM IST

Updated : Aug 23, 2021, 1:45 PM IST

தமிழ் சினிமாவின் கிளாசிக் இயக்குநர் மகேந்திரனின் ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான பெருமை மோகனுக்கு உண்டு.

நடிகை சுஹாசினியும் இவருடன் இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றது. இப்படத்தில் மோகனும் சுஹாசினியும் ஜாகிங் போகும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட ’பருவமே புதிய பாடல் பாடு’ தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்களில் ஒன்று.

வெள்ளி விழா நாயகன்

’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் ஒரு ஆண்டுக்கும் மேல் திரையில் ஓடி சாதனை படைத்த நிலையில், மோகன் ’வெள்ளி விழா நாயகனாக’ அறியப்பட்டார்.

உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் தமிழ் சினிமாவின் கோலோச்சிய அன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, 24 மணி நேரம், நூறாவது நாள், இதய கோவில், உதய கீதம், மௌன ராகம், மெல்ல திறந்தது கதவு, ரெட்டை வால் குருவி என பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக மோகன் கொண்டாடித் தீர்க்கப்பட்டார்.

நடிகைகளின் அம்மாக்களின் ஃபேவரைட் ஹீரோ

தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி காலக்கட்டம் தொடங்கி த்ரிஷா, ஹன்சிகா வரை நடிகைகளின் தாய்மார்கள் அனைத்து படப்பிடிப்பு தளங்களுக்கும் வந்து தங்கள் மகள்களின் பாதுகாப்பை உறுதி செய்வது வழக்கம்.

ஆனால் 80களின் காலக்கட்டத்தில் ஒரு நடிகருடன் தங்கள் மகள்கள் நடித்தால் கொஞ்சமும் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கலாம் என ஹீரோயின்களின் அம்மாக்களால் புகழப்பட்ட ரத்தின நடிகர் மோகன். இதனை நடிகை சுஹாசினி ஒரு பேட்டியில் பெருமையுடன் பகிர்ந்திருப்பார்.

மோகன் ஹிட்ஸ்

தமிழ் சினிமா வரலாற்றின் முத்து முத்தான பாடல்கள் அமைந்த நல்வாய்ப்பு பெற்றவர் மோகன். குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையில், பாடகராக மோகன் நடித்த பெரும்பான்மை படங்களில் அப்பாடல்களுக்கு திரையில் உயிர் கொடுத்து ஆடியன்ஸ்களிடம் பாடல்களைக் கடத்தியிருப்பார்.

இளையராஜா ஹிட்ஸ், எஸ்பிபி ஹிட்ஸ் எனும் பிளே லிஸ்டுகளுக்கு மத்தியில் உலவும் ’மோகன் ஹிட்ஸ்’ பிளே லிஸ்டே இதற்கு சான்று!

மோகன் - பூர்ணிமா ஜோடி

ஆன்-ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியில் ரசிகர்களைக் கவர்ந்த இன்றைய பல சினிமா ஜோடிகளுக்கும் முன்னோடி மோகன் - பூர்ணிமா ஜோடி. கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை என பூர்ணிமா பாக்யராஜுடன் அவர் நடித்த படங்கள் இன்றளவும் 80ஸ் இளைஞர்களின் ஃபேவரைட் காதல் படங்களின் பட்டியலில் முதலிடம் பெறுபவை.

மோகனின் குரு

சினிமாவில் மோகன் தன் குருவாக பாலுமகேந்திராவைக் கருதுகிறார். 'ரெட்டை வால் குருவி’ படத்தில் ஹீரோவாக நடித்த மோகன், அதற்கு முன்னதாக ’மூடுபனி’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார்.

80களைக் கலக்கிய ‘விதி’ படம்

மோகன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த படங்களில் முக்கியமான படங்கள் நூறாவது நாள், விதி.

’விதி’ படத்தின் வசனங்கள், குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் நீதிமன்ற வாதக் காட்சிகளை ரேடியோ காலத்தில் வசன கேசட்டுகள் வாங்கி பலரும் கேட்டு கொண்டாடினர். தொடர்ந்து 25 வாரங்கள் தியேட்டர்களில் இப்படம் ஓடி சாதனை படைத்தது.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் இப்படம் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பேக் டு பேக் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து வந்த காலத்தில் இத்தகைய கதையை தேர்ந்தெடுத்து நடித்த மோகனின் சமூகப் பார்வை என்றும் பாராட்டுக்குரியது.

குரல் கொடுத்த விஜயின் தாய்மாமா

கர்நாடகாவை பூர்விகமாகக் கொண்ட மோகனின் தமிழில் கன்னட வாடை வீசியதால் அவருக்கு பெரும்பாலும் இரவல் குரலே உபயோகிப்பட்டது. அப்படி தமிழில் தனது குரலால் மோகனுக்கு திரையில் உயிர் கொடுத்தவர் விஜயின் தாய்மாமா சுரேந்தர். கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட படங்களில் மோகனுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார்.

இன்று (ஆக.23) தனது 65ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மோகனுக்கு ஈடிவி பாரத் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்.

Last Updated : Aug 23, 2021, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.